chennai: சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்ற காவலர் ஜேம்ஸ்(35) காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம்.
ஆனால் அந்த போதை பொருளை காவலர் ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருக்கிறது.
எனவே போதைப்பொருள் தடுப்பு தனிப்படையினர் ரகசியமாக சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்து இருக்கிறார் சுரேந்திரநாத்(37). அவர் கையும் களவுமாக பிடித்த போலீசார் மேலும் விசாரணை செய்து இருக்கிறார். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில், காவலராக பணியாற்றி வரும் ஜேம்ஸ்(35) அந்த நபருக்கு போதை பொருள் விற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இதனை அறிந்த போலீசார் அந்த காவலரை போதை பொருள் விற்கும் போது கையும் களவுமாக பிடித்து இருக்கிறார்கள். மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திரை பிரபலங்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கு போதைப் பொருள் விற்று இருப்பது தெரியவந்துள்ளது. இச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.