வரும் 14ஆம் தேதி அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

Photo of author

By Sakthi

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிநாராயணன் நேற்றைய தினம் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிநாராயணன் தெரிவித்து இருக்கிறார்.

அந்த சமயத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இருக்கக்கூடிய தாஜ் ஹோட்டலில் வருகின்ற 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, புதுவை, ஆகிய மாநிலங்களில் முதல் அமைச்சர்கள் மற்றும் அந்தமான், லட்சத் தீவு, உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களும் பங்கேற்று கொள்கிறார்கள் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த கூட்டத்தை மாபெரும் வெற்றி கூட்டமாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சியர், ஒரு சில முக்கிய விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது இந்த கூட்டத்தை வெற்றி பெற செய்ய வைக்கும் விதத்தில் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என குறிப்பிட்ட அவர், மிக முக்கியமான பிரமுகர்கள் தங்கள் பகுதிகளில் உதவி மையங்களை அமைக்க வேண்டும் என்றும் மருத்துவ மையங்கள் பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு, உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்பாடுகளையும் தவறாமல் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.