தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா?
கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் நிழல் மக்களுடன் ஒன்றிணைந்து வருகிறது.மக்கள் இந்த கரோனா காலகட்டத்தில் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கரோனாவின் முதல் அலையில் அனைத்து நாடுகளும் அதிக அளவு பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியா பெருமளவு பாதிப்பை சந்திக்கவில்லை. இரண்டாவது அலையில் அதன் பிடியில் இந்திய வசமாக சிக்கிக்கொண்டது.அவற்றிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது அலை தொடரும் என்ன மருத்துவ ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.மூன்றாவது அலையில் இந்தியா சிக்கிக்கொள்ளாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது.அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொற்று பரவல் உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.கடந்த 13-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் மலைவாழிடங்கள் மற்றும் சந்தைகளில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளி இல்லாமலும் நடந்துகொள்வது கவலை அளிக்கிறது என்று கூறினார்.அதனை அடுத்து பல கட்டுப்பாட்டு நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.அந்த வகையில் இன்று தொற்று பரவலை நிலவரம் கண்டறிய தமிழ்நாடு உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்பொழுது கரோனா தொற்றின் தாக்கம் எந்த வகையில் உள்ளது என்பது பற்றியும் மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்த நடைமுறைகள் எடுக்க கோரியும் இக்கூட்டத்தில் பேச இருப்பதாக கூறுகின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதால் மேகதாது அணை கட்டுதல் பற்றியும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது பற்றியும் பேச நேரிடும் என சுற்று வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதே தமிழக அரசு மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் மத்திய அரசோ எந்த உதவியும் அளிக்காமல் இருந்து வருகிறது.இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் காரசாரமான மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.