வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு !! ஆத்திரமடைந்த நீதிபதி கொடுத்த தண்டனை

0
142

நீதிமன்றத்தின் காணொளி மூலம் வீடியோ கான்பிரன்ஸ் விசாரணை நடத்தப்பட்டபோது சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞருக்கு குஜராத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதமாக கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பினால் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களின் வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி வருகின்றனர் .தற்பொழுது மத்திய அரசு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும், முக்கியமான வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.மீதமுள்ள வழக்குகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது.அதில் வாதாடிய வழக்கறிஞர் ஒருவர் காரில் அமர்ந்து, புகைபிடித்த கொண்டுருந்தபடியே வழக்கில் வாதிட்டுள்ளார்.

இதனைக்கண்ட நீதிபதி ஆத்திரமடைந்து, நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ரூபாய்.10,000 அபராதம் விதித்துள்ளனர் .மேலும், வீடியோ கான்பரன்சில் வாதாடும் வழக்கறிஞர்கள் வீடுகளிலோ அல்லது தங்கள் அலுவலகங்களில் இருந்து மட்டுமே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக வாதாட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Previous articleலேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்! வைரலாகும் புகைப்படம்!
Next articleதமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW)