புஷ்கர் காயத்ரி தம்பதியினர் அசுரத்தனமான திரைகதையான சுழல் 2 ஐ தயாரித்துள்ளனர். இந்த வெப்சீரியஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
முதல் சீசனில் காட்டியிருந்த அதே பரபரப்பையும் புத்துணர்வையும் இயக்குனர்களான பிரம்மா – கே எம் சர்ஜுன் கொடுத்துள்ளனர். சாம். சி. எஸ்ஸின் பாடல்களும் இசையும் மிரளவைத்துள்ளது. முதல் சீசனில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் இரண்டாம் சீசனிலும் நடித்துள்ளனர் அவர்களை தவிர பல புது முகங்களும் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர். மலையாள நடிகரான லால் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இளம் பெண்களான 8 பேர் இந்த கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மோனிஷா பிளஸ்ஸி மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்து எனும் கதாபாத்திரத்தில் முதன்மையானவராக கௌரி கிஷன் நடித்துள்ளார். கௌரி கிஷன், மோனிஷா பிளஸ்ஸி, சம்யுக்தா வயோலா விஸ்வநாதன், ரினி, ஶ்ரீஷா, அபிராமி போஸ் ,நிகிலா ஷங்கர் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் இந்த தொடரில் மிகவும் போல்டாக நடித்து அசத்தியுள்ளனர்.
பெண்கள் சிறப்பு சிறைச்சாலையில் வழக்கறிஞரான செல்லப்பாவை (லால்) கொலை செய்த குற்றத்திற்காக சரணடைந்த பெண்கள் 8 பேரையும் நிர்வாணமாக உடைகளை களைத்து நிற்க வைக்கும் காட்சி ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது . ஆபாசம் இல்லாத அளவுக்கு கேமிராவை கழுத்திர்க்கு கீழே இறங்காமல் சரியான விதத்தில் கையாண்டதால் இந்த வெப்சீரிஸிசை பொதுமக்கள் முகம் சுளிக்காத அளவிற்கு கொடுத்துள்ளனர் .
மகளிர் சிறையில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் புதிதாக வரும் சிறை கைதிகளை அங்கே உள்ள தண்டனை கைதிகள் எப்படி எல்லாம் கொடுமை செய்கிறார்கள், சிறையில் இருக்கும் பெண்களுக்கு எப்படி எல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என்பதையும் தெள்ளத் தெளிவாக சுழல் 2 வெப்சீரிஸில் காட்டியுள்ளனர்.