தொடர்ந்து கனமழை நீட்டிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
கடந்த வாரத்தில் இருந்த தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மழை பொழிந்து வருகின்றது. அதனை தொடர்ந்துசென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.எந்த அறிவிப்பில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் பெய்யும்.
மேலும் நவம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.அதனை தொடர்ந்து ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மலை பெய்யக்கூடும்.இவ்வாறு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படையும் என மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.