தொடரும் OTP மோசடி!! இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு மக்களே!!

0
150
Continued OTP Fraud!! Time to put an end to this people!!
Continued OTP Fraud!! Time to put an end to this people!!

இன்றைய உலகில் தொழில் நுட்ப வசதி அனைத்து வேலைகளையும் எளிதாக்கி வருகிறது.முன்பெல்லாம் பணம் எடுக்க மற்றும் செலுத்த வங்கியில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை இருந்தது.ஆனால் தற்பொழுது தொழில்நுட்ப வசதியால் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது.தொழில் நுட்ப வளர்ச்சியை போல் அதனோடு தொடர்புடைய மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக OTP-ஆல் பல பண மோசடிகள் நடைபெறுகிறது.SMS வாயிலாக வரும் இந்த OTP அதாவது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் மோசடி செயல்கள் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 95 ஆயிரம் UPI பரிவர்த்தனை மோசடி நடைபெற்றிருக்கிறது.நீங்கள் OTP மோசடிகளில் சிக்கி கொண்டால் பண இழப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.இந்த OTP மோசடியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதலில் தங்களுக்கு தெரியாத மொபைல் அழைப்பு,குறுஞ்செய்தி அழைப்பு அல்லது மின்னஞ்சல் அழைப்பு வந்தால் அதை தவிர்க்க வேண்டும்.

உண்மை தன்மை அறியாமல் OTP எண்ணை பகிர வேண்டாம்.குறிப்பாக வங்கியில் இருந்து OTP கேட்கிறோம் என்ற அழைப்பு வந்தால் அதை புறக்கணித்துவிட வேண்டும்.காரணம் எந்த வங்கிகளும் மொபைலுக்கு அழைத்து OTP எண் கேட்காது.எக்காரணத்தை கொண்டும் OTP எண்ணை மட்டும் பகிராதீர்கள்.

SMS,E-mail போன்றவற்றில் வரும் இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைலில் வலுவான கடவுச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.OTP எண் கேட்டு போலி அழைப்பு வந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

Previous articleதீபாவளி அன்று இனிப்பு காரம் சாப்பிடுவதற்கு முன்.. குடல் ஆரோக்கியமாக வைக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
Next articleஇது தெரியாமல் காதுகளில் உள்ள மெழுகு அழுக்கை சுத்தம் செய்யாதீர்கள்!! ஆபத்தாக மாறும் பழக்கம்!!