தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா?
கடந்த சில மாதமாக இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருகின்றனர்.அதில் ஒரு பகுதி தான் ஈரோடு மாவட்டம்.இம்மாவட்டத்தில் குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில்,போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் துணை போலீசார் ஆகியோர் பவானி அருகே சிங்கம் பேட்டை பகுதியில் நேற்று போலீசார்கள் ஒன்று கூடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார்கள் சோதனை செய்து வந்தனர்.அந்த சோதனையில் 1000 கிலோ மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதைதொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்
.அந்த விசாரணையில் அரிசி மூட்டைகளை எல்லாம் வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அதற்காக தான் இந்த அரிசிகளை கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.மேலும் பூதப்பாடியில் உள்ள கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 1640 கிலோ ரேசன் அரிசியையும் போலீசார்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவர் ஓட்டி வந்த கார் மற்றும் 2 ½ டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.