தென்காசி அருகே சோகம்! மாணவியின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு!

0
152

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கின்ற குலசேகரமங்கலம் கிராமத்தைச் சார்ந்த அமல்ராஜ், வெண்ணியார், தம்பதிக்கு ராஜலக்ஷ்மி என்ற மகளும், உதய ஜோதி என்ற மகனும், இருக்கிறார்கள்.

கடந்த 2 வருட காலமாக நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த ராஜலட்சுமி தற்போது 3வது முறையாக தேர்வு எழுதியுள்ளார் எதிர்வரும் ஏழாம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மாணவி ராஜலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ,நீட் தேர்வு முடிவுகள் காரணமாக, சோகமாக இருந்து வந்த மனைவி ராஜலட்சுமி விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சங்கரன்கோவிலில் இருக்கின்ற தனியார் பயிற்சி மையத்தில் மாணவி ராஜலட்சுமி சேர்ந்து படித்து 3வது முறையாக நீட் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!
Next articleதிடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?