Home State தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகள் அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த பொதுமக்கள் பின்னர் விழிப்புணர்வு கொண்டு அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தொடங்கினார்கள்.

இதனால் மெல்ல, மெல்ல நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியது. நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கிய சமயத்தில் திடீரென்று நோய் தொற்ற பரவலின் இரண்டாவது அலை உண்டானது. இதனால் மீண்டும் நோய் தொற்று பரவல் வேகம் எடுக்க தொடங்கியது, இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் மறுபடியும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கின.

இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தடுப்பூசி பணிகள் நடந்த வந்தாலும் கூட அதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியவுடன் மாநிலம் முழுவதும் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கானவர்கள் பயன்பெறும் விதத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன, இதனால் வெகுவாக நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியது.ஆனால் தற்போது நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்பேயில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அதேபோல நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் உடைய எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும், தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,164 நபர்களுக்கு நோய்தொற்று ஒரு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 91 ஆயிரத்து 797 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பால் நேற்றைய தினம் 20 நபர்கள் பலியாகி இருக்கிறார்கள், இதன் மூலமாக இதுவரையில் நோய் தொற்றினால் பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 968 ஆக அதிகரித்திருக்கிறது.

அதே நேரம் நோய் தொற்று சிகிச்சை முடிந்து நேற்று மேலும் 1412 நபர்கள் வீடு திரும்பி இருக்கிறார்கள், இதன் மூலம் நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 39 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது வரையில் 13 ஆயிரத்து 790 நபர்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை சார்பாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 152 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.