இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
இம்மாச்சல பிரதேசத்தில் தற்போது பருவமழை காலம். எனவே அங்கு பல்வேறு நகரங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுள்ளன. அதன் காரணமாக அங்கு மூன்று நாட்களுக்கு முன் மேக வெடிப்பும் ஏற்பட்டது.
அதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. பல பேர் மாயமான நிலையில், அதில் பல பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு குழுக்களால் மீட்கப்பட்டனர். இருந்தபோதும் பலர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மாயமானவர்களை மீட்கும் பணிகளும் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் மழை, வெள்ளம், மேகவெடிப்பு, நிலசரிவின் காரணமாக அங்கு மட்டும் 632 கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது பற்றி அதன் இயக்குனர் சுரேஷ் குமார் மோக்தா கூறும்போது, இதுவரை மக்களில் 211 பேர் உயிரிழந்ததாகவும், 438 விலங்குகள் பலியாகியுள்ளதாகவும், 150 வீடுகள் முற்றிலும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பப் பட்டால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் நினைக்க தொன்றுகிறது. உலகம் நம்மை அனைத்து விதத்திலும், பழி தீர்க்கிறது என்று நினைக்கலாம் அல்லவா? அதனால் அனைவரும் அன்புடன் அனைவரிடத்திலும் பழகலாம். ஏனென்றால், நாம் எல்லாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதே கேள்விக்குறியாகி உள்ளதே.