தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

Photo of author

By Sakthi

 

தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

 

தொடர் வளர்பிறை முகூர்த்த தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும்(ஆகஸ்ட்18), நாளையும்(ஆகஸ்ட்19) 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

தொடர் விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்கள், பொதுவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் ஆகிய சிறப்பு நாட்களில் மக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

 

அதன்படி அடுத்து வரவுள்ள ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 21 ஆகிய வளர்பிறை முகூர்த்த தினங்களை முன்னிட்டு இன்றும்(ஆகஸ்ட்18), நாளையும்(ஆகஸ்ட்19) சென்னையில் இருந்து பல பகுதிகளுக்கு கூடுதல் அரசு விரைவு பேருந்து இயக்கப்படவுள்ளது.

 

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் வளர்பிறை சுபமகூர்த்த தினங்கள் வருகின்றது. இதை முன்னிட்டு இன்றும்(ஆகஸ்ட்18), நாளையும்(ஆகஸ்ட்19) சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் கூடுதலாக சிறப்பு விரைவு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதையடுத்து சென்னையில் இருந்து பிற இடங்குளுக்கு 500 சிறப்பு விரைவு பேருந்துகள் இன்றும்(ஆகஸ்ட் 18), 350 சிறப்பு பேருந்துகள் நாளையும்(ஆகஸ்ட்19) இயக்கப்படவுள்ளது.

 

அது மட்டுமில்லாமல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம்.ஆகிய முக்கிய இடங்களில் இருந்து பிற இடங்களுக்கும், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஆக மொத்தமாக 1250 சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 

மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப பயணிகளுக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படவுள்ளது. அதாவது ஒரே தடத்தில் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் 6வது முறை அதே தடத்தில் முன்பதிவு செய்து பயணம் செய்தால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

 

அதன்படி இந்த திட்டத்தின் மூலமாக மே 8ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி வரை பயணித்த 1682 பயணிகளுக்கு இந்த 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் கட்டணச் சலுகையை பெறுவதற்கு பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.