அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பிரபல பிரவுசிங் நிறுவனம்!

0
188

உலகம் முழுவதும் இன்டர்நெட் பிரவுசிங்கில் கொடிகட்டிப் பறந்து வருவது அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனமான கூகுள் நிறுவனம். இந்த கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கிடையே பாகுபாடு காட்டப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்திருக்கிறது இது உண்மை என ஒரு சம்பவம் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ஆம் வருடம் 15500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஆண்களும், பெண்களும், ஒரே பதவியில் இருந்தபோதும் கூட இந்த ஊதிய பாகுபாடு காணப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பெண் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்திடம் புகார் வழங்கியும் போதுமான பதில் வழங்கப்படவில்லை. இதனால் வேலையை விட்டுச் சென்ற முன்னாள் ஊழியர்கள் சிலர் 2017 ஆம் வருடம் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு விசாரணை 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்திருக்கிறது. ஆகவே புதிய பாகுபாடு காட்டப்பட்ட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 118 மில்லியன் டாலர் இந்திய மதிப்பின் அடிப்படையில் 920 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Previous articleபேரதிர்ச்சி! இந்தியாவில் 8000த்தை கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!
Next articleரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!