“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

Photo of author

By Pavithra

“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில்,அதற்கு ஏற்ற வேலைகள் அனைத்துக் கட்சிகளிலும் முழுமும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில்,
எம்ஜிஆர் படத்துடன் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான விஜய் படத்தை சித்தரித்து,விஜய் ரசிகர்களால் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த சுவரொட்டியில் மக்கள் நலன் காக்க, மாணவர்கள் குறைதீர்க்க தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வர் உங்கள் ஆட்சிக்காக காத்திருக்கிறோம்.என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
சர்ச்சையை கிளப்பும் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.