சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக கையில் எடுத்து இயக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் ‘ஹரஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் இயக்கினார்.

இந்நிலையில் ‘ஹரஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டுஅறையில்முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு படங்களுமே அடல்ட் காமெடி படங்கள் வெளியாகி அடல்ஸ் மத்தியில் செம ஹிட் அடித்தது. இவ்வாறு இருக்க தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற திரைப்படம் உருவாகி இருப்பது நாம் அறிந்ததே.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவை தொடர்ந்து வரிசையாக வெளியாகி பெரும் பரபரப்பை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தி உள்ளது..

மேலும் இந்த டீசர், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றிற்கு சர்ச்சையான கமெண்ட்டுகள் கிடைத்தாலும் பல இயக்குனர்களின் விமர்சனத்திற்கு உள்ளானளும் இந்த இரண்டாம் குத்து டீஸர் வெளியான 12 மணி நேரத்தில் யூட்யூபில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.மேலும் இந்த படத்தின் டீசர் அதிக பார்வையாளர்களை பெறுவார்கள்  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.