அதிமுக கூட்டணியில் வெடிக்கும் சர்ச்சை.. பாஜக முக்கிய தலைகளுக்கு கெட்டவுட் சொன்ன EPS!! கொந்தளிப்பில் மோடி!!

0
469
Controversy erupts in AIADMK alliance.. Modi in extreme anger!!
Controversy erupts in AIADMK alliance.. Modi in extreme anger!!

ADMK BJP: அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். அதன் காரணமாகத்தான் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார். ஆனால் கூட்டணி வைத்ததிலிருந்து இலையின் மீது தான் தாமரை மலரும், கூட்டணி ஆட்சி என அமித்ஷா முதல் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் கூறி வந்தனர்.

இதற்கு எடப்பாடி ஒரு இடத்திலும் முட்டுக் கொடுக்காமல் தனித்து தான் போட்டி எனக் தெரிவித்தார். இவ்வாறு மாறி மாறி தங்கள் கருத்தை தெரிவிக்கவே முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என பாஜகவே கூறிய பிறகு சற்று அதிமுக நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். அதற்குள்ளேயே மீண்டும் கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சைஆரம்பித்துவிட்டனர்.

இப்படி இருக்கவே எடப்பாடி சற்று பாஜகவிடமிருந்து விலகியே இருக்க நினைக்கிறார். இதில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும் எடப்பாடி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மதுரையில் பிரச்சாரம் செய்தபோது அங்கிருந்த பாஜக முக்கிய தலைவர்களை தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ஏற்க மறுத்துவிட்டார்.

வழக்கமாக ஒரு கட்சித் தலைவர் ஒரு தொகுதிக்கு செல்கிறார் என்றால், அங்கிருக்கும் கூட்டணி கட்சியினரையும் தங்களுடன் நிறுத்தி பேசுவது வழக்கம். ஆனால் இதனை முழுவதுமாக எடப்பாடி மறுத்து இருக்கிறார். இதனால் கோபமடைந்த பாஜக நிர்வாகிகள் அவர் பேசி முடிப்பதற்குள்ளையே அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிராகரிப்பு குறித்த தகவல் அமித்ஷா வரை சென்றுள்ளதால் பாஜக மேலிடம் எடப்பாடி மீது கொந்தளிப்பில் உள்ளார்களாம்.

Previous articleஅனல் பறக்கும் அரசியல் களம்: ஸ்டாலினுடன் திடீர் பந்தம்.. ஆட்டத்தை ஆரம்பித்த OPS!! ஷாக்கில் இபிஎஸ்!!
Next articleஅதிர்ச்சி!! கட்சியை விட்டு விலக அதிரடி முடிவு.. தேதி குறித்த செங்கோட்டையன்!! ஆபத்தில் இபிஎஸ்!!