திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு!
உலகின் அனைத்து நியதிகளையும் இரு அடிகளில் மக்களுக்கு உணர்த்தியவர் திருவள்ளுவர்.அந்தவகையில் மக்கள் அவரை சாதி சொல்லி சொந்தமாக்கிக்க கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.திருவள்ளுவர் அணைந்திருந்தது காவி உடையாக இருந்தாலும் கூட மக்கள் அதை வைத்து சாதியை குறிப்பிடுவார்கள் அதனால் திருவள்ளுவர் படம் போடப்படும் அனைத்திலும் வெள்ளை நிறத்தையே பொதுவாக வைத்து போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியது.
அதனையடுத்து தற்போது தொலைகாட்சியில் குழந்தைகளுக்கென்று பல சேனல்கள் உருவாகியுள்ளது.அதில் அரசாங்கம் உருவாக்கியது தான் கல்வி தொலைக்காட்சி.அதில் தினந்தோறும் குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்வது,அறநெறி கதைகள் சொல்வது போன்றவற்றை செயல்படுத்தி வந்தனர்.அவ்வாறு குழந்தைகளுக்கு திருக்குறள் கூறும் போது திருவள்ளுவர் படம் திரையில் காட்சிபடுத்தப்படும்.அந்த திருவள்ளுவர் படத்தில் வெள்ளை நிற உடைக்கு பதிலாக காவி நிற உடையில் திருவள்ளுவரை காட்சிபடுத்தினர்.
இது நாளடைவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.அதனையடுத்து அதற்கு எதிராக பலர் திருவள்ளுவரின் உடை கருப்பு நிறத்தில் சித்தரிக்கப்பட்டு அதற்கு எதிராக பரப்பி வந்தனர்.அந்த சம்பவமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது கோவை மருதமலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள நுழைவாயிலில் திருவள்ளுவர் புகைப்படும் காவி நிறத்தில் அணிந்தவாறு ஒட்டுப்பட்டுள்ளது.இப்படமானது தற்போது ஒட்டப்பட்டுள்ளது எனக் கூறிய தகவலால் பல எதிர்ப்புகள் மீண்டும் எழத் தொடங்கியது.ஆனால் அப்படமானது பல காலமாக இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவரே,யாருக்கும் சொந்தமானவர் அல்ல.அதேபோல இவர் எங்கள் மாதம் என சுட்டிக்காட்டக் கூடாது என்பதற்காகதான் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால் ஆங்காங்கே நடைபெறும் சிறு தவறுகளால் பெரும் சர்ச்சை உண்டாகிறது.அதனையடுத்து தற்போது அந்த பல்கலைக்கழகம் காவி நிறமுடைய திருவள்ளுவர் படத்தை எடுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.