இன்றைய நவீன சூழலில் திருமணம், காதல் என்பது ரொம்பவும் சாதாரண விசியமாக மாறிவிட்டது. காதல் என்பது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து காதல் செய்வது மாறி இன்று முகமே பார்க்காமல் முன்பின் தெரியாமல் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் காதல் கொள்கின்றனர். திருமணம் என்பது ஆண் பெண் இருபாலரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இதற்கு லிவ்விங் டூ கெதர் என்று பெயர்.
நம் சமுதாய கலாச்சாரம் இது அல்லவே இது போல கலாச்சாரம் அழிவையே தரும் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது நமது செய்தி தொகுப்பு.
ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் இந்துமதி. 20 வயதான இவர் தஞ்சை மாவட்டதிலுள்ள உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்துமதி, ஒரத்தநாடு கால் நடை மருத்துவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரத்த நாடு எழுத்துக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
அந்த வீட்டில் அவரது சடலத்துக்கு அருகே குடி போதையில் சதீஷ்குமார் என்ற இளைஞர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை இறங்கினர்.
மாணவி இந்துமதி, இந்த வீட்டிற்கு வந்து உயிரிழந்தது எப்படி ? என்று போதையில் படுத்திருந்த சதீஷ் குமார் தலையில் தண்ணீரை ஊற்றி விசாரித்த போது இந்துமதி முகநூல் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
எப்போதும் செல்போன் கையுமாக வலம் வரும் இந்துமதி முகநூல் காதலில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகின்றது. அப்போது இந்துமதிக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் முகநூலில் நட்பு கிடைத்துள்ளது.
தலையில் வித்தியாசமான முடிவெட்டு..! முகத்தில் கூலிங்கிளாஸ்..! என வித விதமான புகைபடங்களை முக நூலில் பதிவிட்ட சதீஷ்குமார் தன்னை ஒரு பொறியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்துமதியை காதல் வலையில் விழவைத்துள்ளர்.
இருவரும் 2 ஆண்டுகளாக முகநூலில் காதலித்ததோடு, அவ்வப்போது நேரில் சந்தித்தும் காதலை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் லிவிங் டு கெதர் போல அவ்வப்போது வெளியில் அறை எடுத்து தங்கியும் வாழ தொடங்கி உள்ளனர்.
இவர்களின் காதல் பிணைப்பு அதிகமானதால் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருப்பதாக பெற்றோரிடம் பொய் சொன்ன இந்துமதி, கணவர் சதீஷ்குமாருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அங்கிருந்தபடியே கல்லூரிக்கும் சென்று வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றிதிருமணம் செய்துள்ளார் என தெரிய வருகிறது. சதீஷ் பொறியாளர் அல்ல வெறும் எலக்ட்ரீசியன் என்பதும், அவன் ஒரு குடிக்காரன் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. தினமும் இரவு குடி போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததால் இருவருக்கும் அடிக்கடை சண்டை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி
பெற்றோர் தங்கள் மகள் கல்லூரியில் படித்து வருகிறாள் என்று மாத, மாதம் செலவுக்கு பணம் அனுப்பி வைக்க, இந்துமதி திருமணம் செய்துகொண்டு கணவருடன் தனியாக வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை என்றே கூறப்படுகின்றது. விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது போன்றே வீட்டில் காட்டிக்கொண்ட இந்துமதி அவ்வப்போது ஊருக்கு சென்றுவந்ததால் பெற்றோருக்கும் சந்தேகம் வரவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், இந்துமதியை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை என்று எண்ணி விரக்தியில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்துமதியின் பெற்றோரோ தங்கள் மகளை அடித்து கொலை செய்து சதீஷ்குமார் தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனால் மருத்துவ மாணவி இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்
மேலும் இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது நடந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். தன் மகள் எங்கு செல்கிறாள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை இன்றைய நவீன உலகில் பெண்ணோ ஆணோ வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட செல்கின்றனர். இதனால் முன் பின் தெரியாத நபரிடம் வெறும் வெளித்தோற்றத்தை மட்டுமே நம்பி ஏமாருகின்றனர். இது கலாச்சார சீரழிவு ஆகும்.
மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.