வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! 

Photo of author

By Sakthi

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!!
காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது பொழுது போக்குக்காகவோ அல்லது மற்ற வேலைகளுக்காகவோ செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது டிக் டாக் வீடியோக்களை காவல் துறையின் சீருடையுடன் பதிவேற்றியும் வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் செல்போன்களை வேலை தொடர்பாக மட்டுமே பயன்படுத்தவும் மற்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்பொழுது காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதாவது காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுடன் செல்பி எடுக்க கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது அவருடன் காவலர் ஒருவர் சீருடையுடன் செல்பி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் “பணியில் இருக்கும் பொழுது போலீசார் சினிமா பிரபலங்களுடனோ அல்லது அரசியல் பிரபலங்களுடனோ செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது. அதையும் மீறி செல்பி புகைப்படம் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே உதவி ஆய்வாளர்(SI) ரேங்குக்கு(Rank) கீழ் இருக்கும் எந்தவொரு காவலரும் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது காவலர்கள் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.