கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

0
207

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

சீனாவில் மக்களை பெரும் பீதிக்கு ஆளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பிறந்த குழந்தை ஒன்று தப்பித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 800 பேருக்கும் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். இந்நிலையில் இப்படிப் பட்ட கொடூரமான வைரஸிடம் இருந்து கருவில் இருக்கும் ஒரு குழந்தை தப்பித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் உள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Previous articleவங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!
Next articleஅஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here