கொத்தமல்லி புதினா இருந்தா போதும் முகம் வெள்ளையாக !!
பெரும்பாலும் மனிதர்களின் நிறமானது கருப்பு, வெள்ளை, என மாறுபட்டுக் கொண்டே இருக்கும். கருப்புதான் நம் நாட்டின் நிறம் என்றாலும், கருப்பாக இருப்பவர்கள் இந்த சமூகத்தில் பெரும் அவமானங்களையே தான் தற்போது சந்தித்து வருகின்றனர்.
அவ்வாரே கருப்பு நிறம் நீங்கி முகம் பொலிவு பெற வீட்டில் இருக்கும் எளிதான மூன்று பொருட்களை பயன்படுத்தியே இயற்கை முறையில் நிறமாற்றத்தை உண்டாக்கச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1. கொத்தமல்லி தலை
2. புதினா தலை
3. கத்தாழை ஜெல்
செய்முறை:
1. கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலையை கழுவி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
2. வெட்டிய இலையை ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
3. கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி கற்றாழை ஜெல்லை அரைத்து அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
4. கற்றாழையை சேர்த்த பிறகு மீண்டும் அந்த தண்ணீரை வடிகட்டி பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
5. பதப்படுத்திய இந்த நீரானது லேசான பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.
6. இந்த நீரை தினமும் தூங்குவதற்கு முன்னால் முகத்தில் தடவிக் கொண்டு காலை எழுந்ததும் கழுவி விட வேண்டும்.
7. இதைப் போல ஒரு ஏழு நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கருமை நிறம் நீங்கி முகம் பொலிவு பெறும்.