கொஞ்சும் அழகிக்கு கொரோனா பாதிப்பா!!

0
135

தமிழ் சினிமாவில் கொஞ்சும் அழகாய் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஜெனிலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தமிழ் தெலுங்கு என பிற மொழிகளில் முன்னணி நடிகையான ஜெனிலியா, தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் சந்தோஷ் சுப்பிரமணியம் சச்சின் உத்தமபுத்திரன் வேலாயுதம் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

அதன்பின் 2012ம் ஆண்டு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ரியான், ராஹில் என்ற அழகிய ஆண் குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா  சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது மீண்ட அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுவாரசியமான விஷயம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனைக்கு பின்பு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததால் சுமார் 21 நாட்கள் நான் தனிமை படுத்தப்பட்டேன்.

கொரோனா நோயிலிருந்து வெளிவருவது எளிதாகத்தான் இருந்தது ஆனால் அந்த 21 நாள் தான் எனக்கு கடுமையான சவாலாக அமைந்தது.தனிமைபடுத்துவதன் மூலம் நம்மை சுற்றி இருக்கும் அன்பானவர்களை விலகி இருப்பது தான் உண்மையாகவே ரொம்ப கொடுமையான விஷயமாய் இருந்தது என்று அந்த பதிவில் கொரோனா பாதிக்கப்பட்ட தருணத்தை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

Previous articleஇன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?
Next article30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!