தென்காசி மாவட்டத்தில் கொரோனோ விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Photo of author

By Ammasi Manickam

தென்காசி

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .இதனால் அந்தத் தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் வடகரை சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து அச்சன்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கனகராஜன் ஆகியோர் தலைமையில் அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனோ நோயில் இருந்து மக்களை காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் நாளை முதல் அனைத்து வியாபார கடைகளும் உணவகங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி செயல் அலுவலர் கே.முரளி அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.