புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

Photo of author

By Parthipan K

புதுச்சேரியில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 304 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 10 பேரும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,859 ஆக உயர்ந்துள்ளது.

இதை அடுத்து 285 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 6,942 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் மேலும் 5 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் இன்றைய தேதியில் 3,753 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 1,696 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,057 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.