முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்!

Photo of author

By Rupa

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதனுடன் ஆட்டத்தை முதன் முதலில் சீனாவில் தொடங்கியது.அதன் பின் அனைத்து நாடுகளுக்கும் ஊடுருவி சென்றது.இந்நிலையில் மக்கள் அனைவரும் பீதியடைந்து கிடந்தனர்.அதன்பின் அனைத்து நாட்டு அரசாங்கமும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றானது பெருமளவு குறைந்தது.அந்நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது மக்கள் கொரோனாவை மறந்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ தொடங்கியாதல் இன்று இந்த கொரோனா தொற்றானது ருத்ரதாண்டவம் ஆட ஆரமித்துவிட்டது.அதிலும் மகாராஷ்டிரா,தமிழ்நாடு,கேரளா என முக்கிய இடங்களில் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.ஆகையால் மகராஷ்டிராவில் சில தளர்வுகளுடன் கூடிய லாக்டௌன் சில பகுதிகளில் போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி மகாராஷ்டிராவில் சில வாரங்களாகவே இந்த கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படி அறிவுறுத்தியும் வருகின்றனர்.

அவ்வாறு தடுப்பூசியை போட்டுக்கொண்டும் மகராஷ்டிரா முதல்வர் மகன் மற்றும் அமைச்சருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த தகவலை அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,எனக்கு கொரோனா தொற்றானது லேசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது.அதனால் என்னை நான் தனிமை படுத்திக் கொண்டுள்ளேன்.என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்.மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்.பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியமானது என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.