மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மேலும் திருமணங்களில் குறைந்த நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா முதன் முதலில் தோன்றிய இடமாக கூறப்படும் சீனாவில் தென் கடற்கரை நகரமான மக்காவில் புதிதாக 40 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் அதன் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்தப் பகுதியிலிருந்து ஒருவரும் வெளியே செல்லக் கூடாது எனவும் உத்தரவுவிடப்பட்டுள்ளது.சீனா நாட்டில் மக்கால்லில் 5,000 மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சீனாவில் மக்காவோ நகரத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசிகள் போட்டவர்களுக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனாவில் தயாரிக்கப்படும் தடுபூசிகளை பயனில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றார்கள்.மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடமான தியேட்டர், சலூன், ஷாப்பிங் மால் , மதுபானக் கடைகள் போன்றவற்றை மூடவும் உத்தரவுவிடப்பட்டுள்ளது.