சென்னையில் இரண்டு நாட்களில் 12 பேர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் மக்கள்

Photo of author

By Parthipan K

சென்னையில் நாளுக்கு நாள் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையின் முக்கிய மண்டலங்களிலும் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக சென்னையின் முக்கிய நகரமான அண்ணா நகரில் இன்றுடன் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது அங்கு வசிப்பவர்களுக்கு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சென்னையின் தூங்கா நகரான கோடம்பாக்கத்தில் 1559 பேரும் , திரு.வி.க நகரில் 1325 பேரும் , அதிகபட்சமாக வடசென்னையின் முக்கிய நகரான ராயபுரத்தில் 2252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலை நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் உட்பட 8 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை மக்கள் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.