செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

Photo of author

By Vijay

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனையை செய்யும் முறையை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில், வெறும் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்து கொண்டு விடலாம் என கூறப்படுகிறது.

உலக அளவில், கொரோனா பரிசோதனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை உள்ளது. ஆனால் இதன் முடிவு வருவதற்கு பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில், வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான புதிய முயற்சியை செய்துள்ளனர். ஹார்மனி கொரோனோ பரிசோதனை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில் சார்ஸ் கோவ் 2 வைரஸின் மரபணு பொருள்கள் கண்டறியப்படுகிறது.

குறைந்த கட்டணத்தில், எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனை இருக்குமென்றும், உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும், உலகெங்கும் அணுகக் கூடியதாக இருக்குமென்றும், வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி லூட்ஸ் கூறியிருக்கிறார்.