சீன நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 200-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இதற்கு ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் தற்போது தப்பவில்லை. அந்த நாடுகளில் தினசரி லட்சம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உண்டாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் மற்றும் ஒமைக்ரான் என்று பல்வேறு மாற்றங்களுடன் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு. இதன் காரணமாக, பொது மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும் கூட வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,86,46,114 ஆக அதிகரித்திருக்கிறது.
நேற்றைய தினம் 40,60,57,341 ஆக இருந்தது.. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 7,32,85,31,780 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் கூட நோய் தொற்று பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 58,19,334 பேர் பலியாகி இருக்கிறார்கள்.