ஹிஜாப் விவகாரம் தேவைப்பட்டால் எதையும் செய்வோம்! உச்சநீதிமன்றம் அதிரடி!

0
91

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தாங்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் சரியான சமயத்தில் தலையிடுவோம் என்றும் கூறி இருக்கிறது உச்சநீதிமன்றம்.

கர்நாடகாவின் உடுப்பியில் அமைந்திருக்கின்ற ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டது. அங்கிருக்கின்ற அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர்கள் தலையில் முக்காடு அணியும் ஹிஜாபை வழக்கம்போல அணிந்து வந்த சமயத்தில் வகுப்பில் அமர கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்கள், ஒருசிலர் காவி துண்டு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் வர தொடங்கினார்கள்.

இதற்கிடையே ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய கூடுதல் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை யில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவி துண்டு உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் செல்லக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைக்கால உத்தரவை எதிர்க்கும் விதமாக மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ, எஸ், போபண்ணா, ஹிமா கோலி, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தயவு செய்து இந்த விவகாரத்தை பெரிய அளவில் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்த நீதிபதிகள், என்ன நடக்கிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். யோசித்துப் பாருங்கள்.

இவற்றை டெல்லிக்குக் கொண்டு வருவது முறையா அதுவும் தேசிய அளவில் இந்த வழக்கில் தவறு நடந்துவிட்டால் நிச்சயமாக காப்போம் ஒவ்வொரு குடிமகனும் அரசியல் சாசன உரிமைகளும் பாதுகாக்கப்படும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.