தமிழகத்தில் 150க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு முதலில் தமிழகத்தில் நுழைவதற்கு சற்று யோசித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் பல நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முதல் நோய்தொற்று உண்டானது.

இதனைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன ,ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக, அரசும், மத்திய அரசும்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மெல்ல, மெல்ல, நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 41,908 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 62 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் என மொத்தமாக 129 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 44 பேரும், கோயமுத்தூரில் 15 பேரும், செங்கல்பட்டில் 13 பேரும், நீலகிரியில் 8 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறைந்த பட்சமாக அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், நாகை, பெரம்பலூர், தேனி, நாமக்கல், திருவாரூர், விழுப்புரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய் தொற்று பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் 12 வயதிற்கு உட்பட்ட 27 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட 28 முதியவர்களுக்கும், நோய்த்தொற்று ஒரு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 60,37,3,532 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு அதில் 34,51,598 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில், 290 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 119 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுகைகளிலும், 55 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நோய்த்தொற்று பாதிப்பால் 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். சென்னை மற்றும் கோவையில் தலா ஒருவர் பலியாகி இருக்கிறார்கள்.

36 மாவட்டங்களில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 380,23 பேர் நோய் தொற்றால் பலியாகியிருக்கிறார்கள். இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து நேற்று 354 பேர் விடுபட்டிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1676 என்ற அளவில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.