பெரம்பலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!

0
88

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக பல திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதோடு பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பெரம்பலூர் சுற்றுவட்டாரத்தில் அதிகம் வெற்றி பெற்றவர்கள் திமுகவினர் தான் என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இதே பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்ற சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலமாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆரம்பித்து வைத்தார்.

இந்த முகாமில் நடைபயிற்சி சாதனம், பிரெய்லி கிட், உள்ளிட்டவை தலா 2 பேருக்கும், கண்கண்ணாடி 14 பேருக்கும், சிறப்பு சக்கர நாற்காலி தல 3 பேருக்கும் செய்தித்துறை கருவி 5 பேருக்கும், என்று ஒட்டுமொத்தமாக 29 குழந்தைகள் உதவி உபகாரணங்களுக்காகவும் 2 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரைக்கப்பட்டனர்.