நாடாளுமன்ற பணியாளர்கள், 175 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை நாடாளுமன்றம் மொத்த பணியாளர்களில் 62% ஆகும். இதனால், திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவதில், மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின்படி ஹைதராபாத்தில் அவர் தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் வெங்கையா நாயுடுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.