கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு!
சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விருந்தாளி போல சென்று அனைவரின் உயிர்களையும் விருந்து சாப்பிட்டு சென்றது.இந்நிலையில் மக்கள் ஓராண்டு காலமாக வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில வெளிநாட்டினருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அதனைப்பற்றிய ஆலோசனைக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இருப்பினும் இந்த கொரோனாவின் தாக்கம் முன்பை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது.
இந்தியாவில் மட்டும் 1,13,85,339 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.கொரோனாவால் குனமானவர்களின் எண்ணிக்கை 1,10,07,352 ஆக இருந்து வருகிறது.தற்போதுவரை 1,58,725 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கிச்சை அளிகப்படுபவர்களில் எண்ணிக்கை 2,19,262 பேராக உள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து 33 % கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி 85% பாதிப்பானது மகாராஷ்டிரம்,தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.
கொரொனோ பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து தமிழகம்,கேரளா மற்ற மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.ஆகையால் நாளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் டெல்லியிலிருந்த படியே அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.மற்றும் அந்த மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறதா மற்றும் விதிமுறைகளை எவ்வாறெல்லாம் பின்பற்றுகின்றனர் எனவெல்லாம் கேட்க உள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தால் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என வெளிவட்டாரங்கள் பல செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.