கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

Photo of author

By Parthipan K

சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்  நிதின் கட்கரி அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  கொரோனா  இந்தியாவில் 51 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று பொதுமக்களை  மட்டுமன்றி பிரபலங்களையும்  பாதித்துள்ளது.  மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போன்றவர்களையும் பாதித்துள்ளது. 

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் இந்த தொற்று பாதித்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு  பிறகே இவர்  குணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிதின் கட்காரி அவர்கள் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் நிதின் கட்காரி அவர்களுக்கு, பிரதமர் மோடி,  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஸ்டாலின் உள்பட பிற அமைச்சர்களும் இவருக்கு ‘நீங்கள் சீக்கிரம் குணமடைவீர்’ என்று ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.