பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி!

Photo of author

By Parthipan K

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி!

Parthipan K

கொரோனா தொற்று நோயின் தாக்கம் இன்றளவும் மக்கள் மத்தியில் குறையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த கொரோனா தொற்று எந்தவித அறிகுறிகளும் இன்றி பரவி வருகிறது.

இந்த கொரோனா தொற்றுநோய்க்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் இந்நோயால் பாதிப்படைந்தனர். தற்போது ஒரு பிரபல நடிகரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவருக்கு குரானா தொற்று நோயின் அறிகுறிகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “சரத்குமாருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றும் பதிவிட்டுள்ளார்.