கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
138

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அனைவருக்கும் அது பரவிய வண்ணமே உள்ளது.களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்,மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா‌ மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து ஆகியோருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்க்கு கொரோனா தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் மருத்துவரின் ஆலோசனை பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

Previous articleஅனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!! ஏன் ராக்கி கட்டப்படுகிறது?
Next articleஎண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை