முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Photo of author

By Rupa

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

கொரோனா  தொற்றானது முதல்  இரண்டாம் அலை என கடந்து தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறி நிற்கிறது. இந்நிலையில் இரண்டு அலைகளை காட்டிலும்   இது அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அவற்றின் தாக்கத்தை விட இது குறைவாகவே இருக்கும்.

இந்த ஒமைக்ரான் தொற்றால் பல மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கோவா , மேற்கு வங்க அரசு போன்றவை தற்காலிகமாக  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.

அதேபோல டெல்லியில் கொரோனாவின் பாதிப்பானது சற்று தலைதூக்கி காணப்படுகிறது.அந்தவகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்பொழுது தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒமைக்ரான் தொற்று அதிக அளவு உயர்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதனால் டெல்லியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதைப்போல நமது தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள்  தென்பட்டது. அதனால் நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப் படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் கொரோனா தொற்று பரவலானது  பழைய நிலைக்கு திரும்புவது போல் அடுத்தடுத்தபடியாக தலைவர்களுக்கு  தொற்றுப்  பரவி வருகிறது.சென்ற வருடம் போல் அதிகளவு உயிர்களை இழப்பதை தடுக்க மக்கள் அனைவரும் அரசாங்கம் கூறும் நடவடிக்கைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.