அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Photo of author

By Parthipan K

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெளிநாடுகளிலும் இந்த கொரோனா நோய் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு 42 வயது ஆகிறது. 

சென்ற வாரத்தில் இவருக்கு கொரோனா இருப்பது  மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாத காரணத்தினால், இவர், அவரின் வீட்டிலேயே தனது அறையில் தனிமை படுத்தி கொண்டுள்ளாராம். 

அத்துடன் மருத்துவரின் பரிந்துரைகளை பின்பற்றி வருவதை இவரின் செய்தி தொடர்பாளர், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்க்கும், அவரின் மனைவி மெலனியாவிற்க்கும் மற்றும் அவரது இளைய மகன் Barron உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு, பின் குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.