பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை அத்தொற்றிலிருந்து மீள மக்கள் பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் தொற்று பாதிப்பானது அதிகரித்துவிடுகிறது.இந்த தொற்றியில் உலகளவில் பல கோடி உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த தொற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று பாதிப்பு குறையும் என்று எண்ணிய எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது.
ஏனென்றால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு எற்படும் அபாயம் வந்துவிட்டது.முதல் தவணை,இரண்டாவது தவணை கடந்து தொற்றை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசியும் வந்துவிட்டது.ஆனால் இந்த கொரோனாவானது ஒமைக்ரான்,ஏ1,டொமைக்ரான்,எக்ஸ்இ என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டு தான் உள்ளது.குறிப்பாக அரசியல்வாதிகள் பலர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேரிட்டது.தற்போது தான் இந்தியாவில் நான்காவது அலை அதிகரித்து வருகிறது.தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு முன்பே அனைத்து மாநிலங்களும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
தற்போது வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.அதனையடுத்து அந்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.தற்போது நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெனுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவருக்கு சில தினங்களாக காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்து வந்துள்ளது.சோதனை செய்து பார்த்ததில் இவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது என்று அவரது பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் இவர் ஏழு நாட்கள் அவரது வீட்டில் தனிமை படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.