திமுக எம்.எல்‌.ஏ.விற்கு கொரோனா தொற்று!

0
126

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக எம்எல்ஏ ராமசந்திரன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அமைச்சர்கள் உள்பட 23 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?
Next articleஇறந்த தாயை தள்ளுவண்டியில் கொண்டு சென்று எரித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமை ஆணையம்?