சீர்காழியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக மூடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதி அனைத்திலும் வரதட்சணை மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம்.
இவ்வாறு இருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வர, அவர் பணிபுரிந்த காவல் நிலையம் மூடப்பட்டது. அதன்பின் அவர் எங்கெல்லாம் சென்றார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார் என்பது குறித்து விசாரிக்கும் போது, அவருடன் பணிபுரிந்த நபர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து விசாரிக்க திருவெண்காடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் பெண் ஒருவரின் வழக்கு தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் நாகை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, நாகை எல்லைக்குட்பட்ட மக்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டு, மிக முக்கிய பிரச்சனை என்றால் மட்டுமே மக்கள் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.