உலகையே உலுக்கி வரும் கொரோனா யாரையும் விட்டு வைப்பதில்லை,ஏழை பணக்காரன் என பார்ப்பதில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைக்காமல் தாக்கி வருகிறது இந்த கொரோனா.இந்த நிலையில் தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டருமான அப்ரிடிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் மற்ற வீரர்களான ஹைதர் அலி, சதாப் கான்,ஹரீஷ் ராஃப் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உலகமே முடங்கி கிடைக்கும் நிலையில் முதல் முறையாக தொடரை நடத்த முடிவு செய்து 3 வீரர்களுக்கு தொற்று இருப்பது பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் போவது குறிப்பிடத்தக்க ஒன்று.எனவே இந்த தொடர் தொடங்கும் முன்பே 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது விளையாட்டு உலகிற்கு கவலை அளித்துள்ளது குறிப்பிட தக்கது.