ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

Photo of author

By Hasini

ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா உலக மக்கள் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு இரண்டு அலைகள் வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதில் அனைவருமே பாதிக்கப்பட்டனர். சிறு, குறு தொழில் செய்பவர் முதற்கொண்டு, பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவருமே பெரும் பொருளாதார பிரச்சினையில் அவதிப்பட்டனர்.

பலரும் பல்வேறு வகையில் அதனால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கும் பள்ளி இல்லாத காரணத்தினால் முழுநேரமும் வீட்டிலேயே அடைந்து இருந்தனர். மேலும் ஆன்லைன் வகுப்பு என்று ஒரு விஷயத்தின் மூலம் கைபேசியை அவர்கள் கையோடு வைத்திருந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக படிப்படியாக குறைந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அனைத்தும் சகஜமாகி விட்டது என்று சிறிது சிறிதாக மீண்டு வரும் நிலையில் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி விட்டதாக சொல்கின்றனர். எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது  குறித்தும், அதன் அறிகுறிகளும் அல்லது அதனுடைய எதிர்வினைகளும் நமக்கு இன்னும் எதுவும் தெரியவில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் அதனுடைய அறிகுறிகள் என்று சிலவற்றை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பள்ளி மாணவிகள் சிலர் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில் இன்று இருவத்தி ஓரு மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அவர்கள் அனைவரும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் உடன் படிக்கும் மாணவிகள் என மொத்தம் 100 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விடுதியில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.