பாஜகவிற்கு தாவ தயாராகும் அதிமுகவினர்! திருச்சியில் துளிர்விடும் திமுகவின் வாரிசு அரசியல்!

0
79

சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை எழுந்து இருந்தாலும் கட்சி தலைமை பலமாக இருந்து வழி நடத்தினால் ஆளும் கட்சியான திமுகவின் அதிகார பலத்தை பண பலத்தால் எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சியில் இருந்தவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ஆனால் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கினால் கட்சியில் இருக்கக்கூடிய மற்ற நபர்களின் உள்ளடி வேலைகள் காரணமாக, சொந்த கட்சியினரே தோற்கடித்து விடுவாரோ என்ற அச்சம் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அதிமுகவினர் பலரும் பாஜகவில் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளராக களமிறங்கி பணபலத்தால் வெற்றி பெறலாம் என்று கணக்குப் போட்டு வருகிறார்கள். வெற்றி பெறவில்லை என்றாலும் தங்களுக்கு டெல்லியின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை. கூட்டணிக் கட்சியாக இருந்தும் தங்கள் கட்சியில் சேர ஒருவரை புறக்கணிக்க கூடாது என்ற முடிவில் பாரதிய ஜனதா கட்சியும் தயாராகி வருகின்றது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன மாவட்டத்தில் இருக்கின்ற இளம் மற்றும் மூத்த அமைச்சர்கள் இருவரை தவிர மற்ற ஏழு சட்டசபை உறுப்பினர்களில் நான்கு பேர் மூத்த சட்டசபை உறுப்பினர்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆகவும் மூன்று பேர் இளம் அமைச்சரின் ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

திருச்சி வடக்கு மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சரால் உருவாக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் ஒருசிலர் மூத்த அமைச்சரின் வாரிசு மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் காவிரியாற்றில் தூர்வாரும் பணிக்கான டெண்டர்கள் விவகாரத்தில் மூத்த அமைச்சர் வாரிசு மற்றும் ஆளுமை காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர் ஆதரவு சட்டசபை உறுப்பினர்களை வாரிசு கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்த தந்தையிடம் வாரிசு பற்றி புகார் கொடுக்கலாமா வேண்டாமா என்று இருதலைக்கொள்ளி எறும்பு போல அவர்கள் தவித்து வருகிறார்களாம்.