ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய 5 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி சீனாவில் இருந்து வந்த ஜவுளி வியாபாரி ஒருவருக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது.அவரை சேலம் மகுடஞ்சாவடி சுகாதாரத்துரையினர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த தினங்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்தது ஆனால் தற்போதுஅவை இரண்டு இலக்காக மாறி வருகின்றது.அதனால் ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அந்த வகையில் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடு விதிப்பது,இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.