கண்ணாமூச்சி ஆடும் கொரோனா : ஒரு வாரம் கழித்தே உறுதியாகும் நோய்த்தொற்று! அதிர்ச்சி தகவல்

Photo of author

By Ammasi Manickam

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 87 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் விவரம் :
மகாராஷ்டிரா – 76
சிக்காகோ – 6
மஸ்கட் – 1
மாலத்தீவு – 1
கேரளா – 1
டெல்லி -1
மேற்கு வங்கம் – 1

இவர்களில் 25 பேருக்கு முதலில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என வந்துள்ளது. ஆனால் ஒருவாரம் கழித்து நடத்தப்படும் இறுதி ஆய்வில், நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதே போன்று, நேற்று (20.05.2020) 18 பேருக்கும், 19 ஆம் தேதி 18 பேருக்கும், ஒரு வாரம் கழித்து இறுதி ஆய்விலேயே கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒருமுறை இல்லை என்று வந்துவிட்டால், அச்சமில்லாமல் பலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்தாவது இனி அவர்கள் எச்சரிக்கையுடன், முகக் கவசம், கிருமி நாசினி பயன்படுத்தி, பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற வேண்டும்.