தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்!

0
170
Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News
Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்!

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8718 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டிருந்த நிலையில் கோயம்பேடு சென்று வந்தவர்களால் தற்போது மீண்டும் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் 700 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 500 க்கும் குறைவில்லாமல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த திங்கள் கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 798 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8002 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று மே 12 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 716 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8718 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்று தமிழகத்தில் தான் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பானது அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 510 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக அரியலூரில் 36 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 35 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 24 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூரில் 27 நபர்களுக்கும், திருவள்ளூரில் 27 நபர்களுக்கும் திருவண்ணாமலையில் 13 நபர்களுக்கும், தேனியில் 7 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளத.

Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News
Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

இந்நிலையில் தமிழகத்தில் செவ்வாய்கிழமையான நேற்றைய நிலவரப்படி மட்டும் 82 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குனமடைந்துள்ளனர். இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக மே 12ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 2134 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் தற்போது வரை 6520 நபர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் குறிப்பாக சென்னையில் மட்டுமே மிக அதிகமாக 4093 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மே 12ம் தேதியான நேற்றைய நிலவரப்படி 11788 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 266687 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று மட்டுமே 11 632 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 2,55,584 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 69 வயது ஆண், 63 வயது ஆண், 43 வயது பெண், 55 வயது பெண் மேலும் கீழ்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது ஆண், 70 வயது ஆண், 58 வயது பெண், சென்னை ஸ்டான்லியில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண், திருவள்ளூரில் 43 வயது பெண், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது பெண், உள்ளிட்டோர் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 61 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரிழந்தவர்கள் அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 716 பேரில் 427 நபர்கள் ஆண்கள், 288 நபர்கள் பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 5848 ஆண்களும், 2867 பெண்களும், 3 திருநங்கைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 12 நிலவரப்படி 4401 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தற்போது வரை 6520 நபர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Previous articleநேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!
Next articleஉலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!