ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கிய கொரானா பாதிப்பு – அச்சத்தில் தமிழகம்

Photo of author

By Parthipan K

தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்றுமட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 82 பேர் ஆவர். இன்றோடு தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 687 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீட்டிற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.

கொரானா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உயர்ந்த நாளாக இன்று பார்க்கப்படுகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரானா பாதிப்பினால்‌ ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அன்றாட தேவைகளுக்கு கதிகலங்கினர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கமானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில தளர்வுகளை அரசு முன்னிருத்தினாலும் அவைகள் ஒன்றும் இயல்பு வாழ்க்கையை மீட்டு தராது எனவும் கூறி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொரானாவல் உயிரப்பவர்களின் எண்ணிக்கையை விட பசி பட்டினியாலும், தனிமையின் மன உலைச்சாலும் மக்கள் பலியாகும் போகின்றனர் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அரசின் லாபத்திற்காக டாஸ்மாக் திறக்கப்பட்டதே கொரானா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்றும் மக்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று பலகையில் எழுதி வியாபாரம் செய்தவர்கள் தானே இவர்கள் என பலரும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.