தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,587 பேருக்கு பாதிப்பு

Photo of author

By Parthipan K

கடந்த இரு நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செவ்வாயன்று 1,544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 1,587 பேராக
உயர்ந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (செப்.8)
வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,587 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,27,365-ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை முந்தைய நாட்களை விட குறைவாக அதாவது 18 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,073-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து 1,594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,76,112-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பா திக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,180 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1,59,772பேருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.